Wednesday 26 February 2020

செல்போனு🐟ம் இன்றைய பெண்களும் 📲🕐



அல்லாஹ்வின் திருப்பெயரால்...

எனக்கு எதுவும் வேண்டாம், ஒரு செல்போன் மட்டும் பொது அது இருந்தால் எனக்கு நேரம் போவதே தெரியாது!  சில குடும்பங்களில் பிரச்னை வருவதற்கு முக்கிய ஒரு காரணம் இந்த செல்போன் தான்! ஷைத்தான் இந்த செல்போன் மூலம் நிறைய காரியங்களை சாதித்துக்கொண்டு இருக்கிறான், நமக்கு தெரியாமலேயே. ஷைத்தானின் வலையில் நாம் பெரும்பாலும் சிக்கிக்கொண்டோம் என்று தான் சொல்லவேண்டும்!

Tuesday 25 February 2020

இருள் நிறைந்த இந்திய தேசம்!

இருள் நிறைந்த இந்திய தேசம்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
சில மாதங்களாக இந்தியாவில் பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மக்கள்கள் அன்றாடம் ஏதாவது ஒரு பிரச்சனைகளை சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியாவில் தொடர் பிரச்சனையாக தான் இருக்கிறது ஒழிய எந்த பிரச்சனைகளுக்கும் எந்த ஒரு தீர்வும் இதுவரை தீர்க்கப்படவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் மனிதநேயம் கொண்டவர்கள் அல்ல, மாறாக மதவெறிபிடித்தவர்கள் . கருணை இல்லாத காட்டுமிராண்டிகள். இரக்கம் காட்டாத கல்நெஞ்சம் உள்ளவர்கள். அவர்கள் உள்ளத்தில் மதவெறி, பகை, பிரித்தாளும் சூழ்ச்சி, பொறாமை, ஆணவம், தீய எண்ணங்கள், தீய செயல்கள் இவைகள் மட்டும்தான் இருக்கிறது.

Wednesday 8 March 2017

பெற்றோரைக் கவனிக்காதவருக்கு சொத்துரிமை உண்டா ?



இறந்த போன கணவரது சொத்தில் பங்கு பிரிப்பது எவ்வாறு?
வாரிசுகள் 1 மனைவி,2 மகன்,1 மகள்.
மகனில் 1மகன் 25 வருடங்களாக தனிக்குடித்தனம் இருக்கின்றார், தாயை கவனிப்பது இல்லை. சொத்து உண்டாக்கியதில் மகனின் பங்கு எதுவும் கிடையாது.
மகள் தாயை பராமரித்து வருகின்றார்.
இந்த நிலையில் இறந்தவரின் வஸிய்யத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது?

பாதிப்பு ஏற்படாத வகையில் என்றால் என்ன ?



இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் சிலருக்கு ஆறில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் ஒரு பங்கு, சிலருக்கு நான்கில் ஒரு பங்கு, சிலருக்கு இரண்டில் ஒரு பங்கு, சிலருக்கு எட்டில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் இரண்டு பங்கு என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
பெரும்பாலும் இவ்வாறு பங்கிட்டுக் கொடுத்து விட முடியும் என்றாலும் சில நேரங்களில் இவ்வாறு பங்கீடு செய்ய முடியாத நிலை ஏற்படும்.
சொத்தை விட பங்கின் அளவு அதிகமாக இருந்தால் அப்போது ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டிய பங்கில் குறைவு ஏற்படலாம். பங்குகளை விட சொத்தின் அளவு அதிகமாக இருந்தால் அப்போது கிடைக்க வேண்டிய பங்குகளை விட ஒவ்வொருவருக்கும் அதிகமாகக் கிடைக்கும் நிலை ஏற்படக் கூடும்.

கலாலா- சந்ததி இல்லாதவர் ?



சந்ததி இல்லாதவர் கலாலா எனப்படுவர். இத்தகையோர் சகோதர, சகோதரிகளை விட்டுச் சென்றால் சொத்துக்களை எவ்வாறு பங்கிட வேண்டும் என்று இவ்வசனம் (4:12) கூறுகிறது.
இறந்தவருக்குப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள் என்று இவ்வசனம் கூறுகிறது.
ஆனால் இதே அத்தியாயத்தின் 176வது வசனத்தில் சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்கும் பாகம் வேறு விதமாகக் கூறப்படுகிறது.
பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும்போது அவனுக்குச் சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழிதவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன் (4:176) என்று கூறப்படுகிறது
ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் சகோதரிக்கு ஆறில் ஒரு பங்கு என்று 4:12 வசனம் கூறுகிறது.

இறைத்தூதர்களின் சொத்துக்கு யார் வாரிசு?



இறைத்தூதர்களாகிய) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.6
6725 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ளநபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்ன ஃபாத்திமா (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தங்களுக்குச்
சேர வேண்டிய சொத்தைக் கேட்டனர். அப்போது அவர்களிருவரும் ஃபதக்’ பகுதி யிலிருந்த தமது நிலத்தையும் கைபரில் தமக்குக் கிடைத்த பங்கையுமே அவ்வாறு கோரினர்.7

சொத்துப்பங்கீடு உதாரணம்



தாய், தந்தைக்கு தனித்தனியாக  6ல்1
இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தரப்பட வேண்டும்.
அவருக்கு(இறந்தவருக்கு)ச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு.
அல்குர்ஆன் (4: 11)