Wednesday 8 March 2017

பெற்றோரைக் கவனிக்காதவருக்கு சொத்துரிமை உண்டா ?



இறந்த போன கணவரது சொத்தில் பங்கு பிரிப்பது எவ்வாறு?
வாரிசுகள் 1 மனைவி,2 மகன்,1 மகள்.
மகனில் 1மகன் 25 வருடங்களாக தனிக்குடித்தனம் இருக்கின்றார், தாயை கவனிப்பது இல்லை. சொத்து உண்டாக்கியதில் மகனின் பங்கு எதுவும் கிடையாது.
மகள் தாயை பராமரித்து வருகின்றார்.
இந்த நிலையில் இறந்தவரின் வஸிய்யத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது?


பதில்
  • தனிக்குடித்தனம் இருப்பது சொத்துரிமையை பாதிக்காது,
  • தாயைக் கவனிப்பதும் கவனிக்காமல் இருப்பதும் சொத்துரிமை சட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
  • சொத்தைப் பெருக்குவதில் ஒருவருக்கு எந்த அளவுக்கு பங்களிப்பு உள்ளது என்பதற்கும் வாரிசுரிமை சட்ட்த்துக்கும் சம்மந்தம் இல்லை.
  • குடும்பத்துடன் சேர்ந்து குட்டுக் குடும்பமாக இருப்பவருக்கும் தனிக்குடித்தமாக வாழ்பவருக்கும் சம்மான சொத்துரிமை தான் உள்ளது.
  • பெற்றோரைக் கவனிக்கும் பிள்ளைகளுக்கும் கவனிக்காத பிள்ளைகளுக்கும் சமமான உரிமை தான் உள்ளது
  • சொத்தைப் பெருக்குவதில் உழைத்தவருக்கும் உழைக்காதவருக்கும் சமமான பங்குதான் உள்ளது. 
உயிருடன் இருக்கும் போதே ஒருமகன் கஷ்டப்பட்டு தொழிலைப் பெருக்குகிறான். இனொரு மகன் தறுதலையாகத் திரிகிறன் என்றால் உயிருடன் இருக்கும் போது பாடுபடும் மகனுக்கு சில சொத்துக்களை எழுதி வைத்தால் அது பிள்ளைகள் மத்தியில் பாரபட்சம் காட்டியதாக ஆகாது. உழைப்பவன் உழைக்காதவன் என்ற அடிப்படையில் பாரபட்சம் காட்டினால் அது சரியான நீதியாகும். அப்படி செய்யாமல் சொத்துக்கு உரியவர் இறந்து விட்டால் அனைவருக்கும் இஸ்லாம் வழங்கியுள்ள குறித்த சதவிகிதம் சமமாக கிடைக்கும்


தாயை கவனிக்கவில்லை என்பது பெருங்குற்றம் என்பதில் சந்தேகமில்லை. எனினும் இதனால் தந்தையின் சொத்திலிருந்து அவனுக்கு (மகனுக்கு) வந்து சேரவேண்டிய பங்கில் பாதிப்பு ஏற்படாது. தந்தையின் சொத்திலிருந்து அவனுக்குரிய பங்கு அவனுக்கு கிடைத்து விடும்.
பெற்றோர்களைக் கவனிக்குமாறும் அவர்களின் மனம் நோகாது நடந்து கொள்ளுமாறு இஸ்லாம் பிள்ளைகளுக்குக் கட்டளையிடுகின்றது. பெற்றோர்களின் மனதை நோவினை செய்வது பெரும்பாவம் என்று நமது மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தாயை கவனிக்கத் தவறிய குற்றத்திற்குரிய தண்டனையை இறைவன் அப்பிள்ளைகளுக்கு வழங்குவான் என்ற எச்சரிக்கையை அவரது மகனுக்கு நினைவூட்டுங்கள். அவர் திருந்தி தனது தாயைக் கவனிக்க கூடும்.

No comments:

Post a Comment