Wednesday 26 February 2020

செல்போனு🐟ம் இன்றைய பெண்களும் 📲🕐



அல்லாஹ்வின் திருப்பெயரால்...

எனக்கு எதுவும் வேண்டாம், ஒரு செல்போன் மட்டும் பொது அது இருந்தால் எனக்கு நேரம் போவதே தெரியாது!  சில குடும்பங்களில் பிரச்னை வருவதற்கு முக்கிய ஒரு காரணம் இந்த செல்போன் தான்! ஷைத்தான் இந்த செல்போன் மூலம் நிறைய காரியங்களை சாதித்துக்கொண்டு இருக்கிறான், நமக்கு தெரியாமலேயே. ஷைத்தானின் வலையில் நாம் பெரும்பாலும் சிக்கிக்கொண்டோம் என்று தான் சொல்லவேண்டும்!


இந்த செல்போனில் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. நன்மையைவிட தீமைகள் தான் அதிகம். ஒவ்வொருவர் பயன்படுத்தும் முறையை பொறுத்து . இந்த செல்போன் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும். அவர்களின் கையில் அந்த செல்போன் படும்பாடு , அதற்க்கு உயிர் இருந்தால் நிச்சயமாக அழ ஆரம்பித்துவிடும்!

அந்த செல்போன் எப்படி பயன்படுத்தப்படுகிறது ? பெரும்பாலும் தவறாக தான் பயன்படுத்துகிறார்கள் என்பது எதார்த்த உண்மை! இந்த செல்போன் மூலமாக எத்துணை பெண்களின் வாழ்க்கை சீரழிந்தது , சீர்கெட்டு போனது என்பது ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது.

ஒரு குழந்தை தன் பெற்றோர்களிடம் இப்படி கூறியது: நான் செல்போனாக இருந்திருக்க கூடாதா ? என்று . அந்த குழந்தையின் பெற்றோர்கள் ஏன் இப்படி சொல்கிறாய் என்று கேட்டார்கள்! அதற்கு அந்த குழந்தை எல்லோரும் நீங்கள் உள்பட இந்த செல்போனை அதிக நேரம் செலவு செய்கிறீர்கள்! அது எல்லோரும் கையில் தவழ்கிறது. அதை நேசிக்காதவர்கள் யாரும் இல்லை என்று அந்த குழந்தை கூறி  முடித்தது! இது உண்மைதானே!

இந்த செல்போன் மூலமாக நம்மில் நிறைய பேர்கள் பார்க்கக்கூடாத ஆபாசங்களை பார்க்கிறோம். இன்டர்நெட் மூலம் நிறைய பெண்களின் ஆபாச படங்கள் உலாவருகிறது. கணவனும், மனைவியும் வீடியோ கால் மூலம் பேசும் பேச்சுக்கள், காட்சிகள்  அவர்களுக்கு தெரியலாம் இன்டர்நெடில் உலாவருகிறது. ரொம்ப மோசமாக நடந்துகொள்ளும் சில பெண்கள் இந்த டிக் டாக் தான்  . அவர்கள் சொல்லும் நியாயமான காரணம் என்ன என்றால், ''அவர்கள் அதில் திறமையை காட்டுகிறார்களாம் ''. இல்லை அவர்களின் உடலை மற்றவர்களுக்கு காட்சி பொருளாக காட்டுகிறார்கள். அந்த டிக் டாக்கில் சில பெண்கள்  ஆண்களை கவர்ச்சியால் ஈர்க்கிறார்கள்.

எங்கும் எப்பொழுதும் எதிலும் எந்தநேரத்திலும் இந்த செல்போன் ஓய்வு இல்லாமல்  பயன்படுத்துகிறார்கள். கணவன் வேலைக்கு போகும்போது , வீட்டுக்கு திருபும்போது 'இந்த பெண்கள் செல்போனை நோடிங்கொண்டே இருப்பார்கள்  , கணவன் வேலைக்கு போயிட்டு வந்திருக்கிறாரே , களைப்போடு இருப்பார்  அவருக்கு என்ன தேவை என்று கேட்போம் என்றல்லாம் இல்லை. வீட்டுக்கு யார் வருகிறார்கள், யார் வெளியே போகிறார்கள் என்பது கூட தெரியாது. இப்படி இருந்தால் பிரச்னை வராமல் சந்தோசமா வரும்?

டிக் டாக்  ஆப் ஒரு மிகப் பெரிய ஆபத்து இருக்கிறது. இந்த டிக் டாக்கினால் எந்த ஒரு பலனும் இல்லை. இதனால் யாருக்கு பாதிப்பு என்றால் பெரும்பாலும் பெண்களுக்குத்தான். டெக்னாலஜி நன்மை இருந்தாலும், பெரும்பாலும் தீமைகள் தான் அதிகம். கைத்தொலைபேசி பலனும் இருக்கிறது, செலவும் இருக்கிறது, நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. அவரவர் அதை பயன்படுத்துவதை பொறுத்து இருக்கிறது. உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால்: கத்தி இருக்கிறது அதைக்கொண்டு காய்கறிகளை கட்பண்ணலாம்... வேறு எதுக்காவது பயன் படுத்தலாம்.. அந்த கத்தியை வைத்து ஒருவனை  குத்தி கொல்லலாம் . இந்த கத்தி நாம் எப்படி பயன்படுத்துவதை பொறுத்து இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு வரையறை உள்ளது, அதை அந்த வரையைக்குள் இருந்தால் எந்த கெடுதியும் அல்லது ஆபத்தும் இல்லை. அப்படி மீறினால் நிச்சயமாக ஆபத்து இருக்கிறது அல்லது கெடுதியில் முடியும்.

நாம் எல்லோரும் ஒவ்வொரு விடயத்திலும் பொறுப்பாளிகள். அந்த பொறுப்புகளை நாம் சரியாக  செயல் படுத்த வேண்டும்! அதேநேரத்தில் நம்முடைய பொறுப்புகளை விசாரிக்க இறைவன்  போதுமானவன்.

நாம் பயன்படுத்தும் எந்த பொருளையும் அளவோடு பாவித்தால் நல்லது. அப்படி இல்லாவிட்டால்  கெட்டதில் போய் முடியும்! சமையல் செய்யும் குழம்பில் அளவுக்கு அதிகமாக உப்பை போட்டால் என்ன ஆகும் என்பது பெண்களுக்கு தெரியாதா??? இது போதும் ...
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
சத்திய பாதை இஸ்லாம் .....

No comments:

Post a Comment